கேள்வி : பெண்களுக்கு எதிரான வன்புணர்வு குறித்தும் அதற்கான தீர்வு என்ன?
இரண்டாவது வாரமாக கலந்துரையாடலில் போது தெரிந்து கொண்ட சிலவற்றை இங்கு பதிவு செய்கிறோம்..
1. பெண்களின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது பெண்களே.
2. பெண்களுக்கு ஆடை குறித்த விழிப்புணர்வு தேவை. சில நேரங்களில் அதுவே ஆபத்தாக அமையும்.
3. பெண்களிடம் புகுத்தி உள்ள மேலைநாட்டு பழக்க வழக்கங்கள்.. தமிழ் கலாச்சாரம் மட்டுமின்றி இந்திய கலாச்சாரமும் மறந்து மறைக்கப்பட்டு வருகிறது.
4. கலவி என்பது ஆண் பெண் இருவருக்கு மட்டுமே என்று தெரிந்த பலருக்கும் ஓரினச் சேர்க்கை இருப்பது தெரியவில்லை..குறிப்பாக பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
5. புதிதாக பரவி வரும் ஓரினச் சேர்க்கை என்பது பற்றி தெரியாத சிலருக்கு மட்டும் இது. ஒரு பெண் இன்னொரு பெண்ணின் மீது காதல் வயப்படுவது. இதன் உச்சக்கட்டம் இருவரும் கலவியில் ஈடுபடுவது இதனையே லெஸ்பினியன் (lesbians) என்று ஆங்கில பெயரை கொண்டு அறியப்படுகிறது.
6. பாலியல் ரீதியாக பெண்கள் பாதிக்கப்படும் சூழல் வரும் போது அதிலிருந்து மீண்டு வர காரத்தே கற்று இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.. தன்னம்பிக்கையும் தைரியமும் இருந்தால் போதும்.அது நம்மை செயல்பட வைக்கும்.
7. வேலைக்கு செல்லும் பெண்கள் எப்போதும் தன்னோடு பெப்பர் ஸ்ப்ரே மற்றும் ஜிபிஆர்எஸ் போன்ற ஏதேனும் ஒரு மென்பொருள் வைத்திருப்பது சாலச்சிறந்தது.
இது போன்ற பல்வேறு கருத்துகளை உள்ளடக்கிய இந்த கலந்துரையாடல் தெரியாத பல செய்திகளை தெரிந்து கொண்டோம்.
அச்சம் தவிர். இது விவாதம் அல்ல. கேள்விகளுக்கு விடைத் தேடும் பயணம்.
பயணம் தொடரும்..

கருத்துகள்
கருத்துரையிடுக